உயிரிழந்த 10 வழக்கறிஞர்கள் குடும்பத்துக்கு ₹1 கோடி நிதியுதவி

சென்னை: தமிழ்நாடு வழக்கறிஞர் நலநிதியத்தில் இருந்து, உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், அந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ₹10 லட்சம் வீதம் மொத்தம் 1 கோடி ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கினார்.

அப்போது, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அமல்ராஜ், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் துணைத்தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் ராமன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post உயிரிழந்த 10 வழக்கறிஞர்கள் குடும்பத்துக்கு ₹1 கோடி நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: