×

திறப்பு விழாவிற்கு தயாராகவுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று, நாளை ஆணையர் ஆய்வு

Pamban Bridge, Rameswaram, Southern railwaysராமேஸ்வரம் : பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இதற்கான பலகட்ட ஆய்வு பணிகள் மற்றும் ரயில் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து, இறுதி கட்டமாக சிஆர்எஸ் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தெற்கு) ஏ.எம்.சவுத்ரி இன்றும், நாளையும் சட்டப்பூர்வ ஆய்வு மேற்கொள்கிறார்.இன்று மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் நிலையங்கள், ரயில்வே கேட் செயல்பாடுகள், சிக்னல், பாலத்தில் மற்றொரு பாதை அமைக்க மறுகட்டுமான பணிகள் துவங்குவது உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்.

ராமேஸ்வரத்தில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையம் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். இதைத்தொடர்ந்து நாளை (நவ. 14) புதிய செங்குத்து தூக்கு பாலத்தை உயர்த்தி, இறக்கி சோதனை செய்து பின் மண்டபம் – பாம்பன் இடையே அதிவேக ரயிலை இயக்கி சோதனை செய்யவுள்ளார்.

இதில் அனைத்து பிரிவு முதன்மை அதிகாரிகள் பொறியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இறுதிகட்ட ஆய்வுக்கான முன்னேற்பாடுகளை மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் ஆர்விஎன்எல் பொறியாளர்கள் குழுவினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

The post திறப்பு விழாவிற்கு தயாராகவுள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்று, நாளை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pamban ,Rameswaram ,Commissioner ,Railway Safety ,A. M. Chowdhury ,Pampan ,Pamban Bagh ,
× RELATED ஜனவரி முதல் வாரம் புதிய பாம்பன் பாலம் திறப்பு?