சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதார துறையினர் அவர்களது கோரிக்கைகள் எதுவும் அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் அவர்களின் உணர்வுகளை வெளிப்பட்டுத்த பதில் அளித்தேன்.
ஆனால் மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். நான் கபட நாடகம் ஆடுவதாக கூறி உள்ளனர். எந்த சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றியி ருக்கிறார்கள்.
The post கபட நாடகம் ஆட வேண்டிய அவசியம் எனக்கில்லை: எடப்பாடி டென்ஷன் appeared first on Dinakaran.