*புதிய ஆணையாளர் தகவல்
வந்தவாசி : வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த ராணி கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தூய்மை பணி மேற்கொள்ள சென்றவரை பூந்தமல்லி நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து வந்தவாசி நகராட்சிக்கு ஆணையாளர் பதவி காலியாக இருந்தது. திருவண்ணாமலை, நகராட்சி செய்யாறு நகராட்சி ஆணையாளர்கள் பொறுப்பு ஆணையாளராக கடந்த ஒரு வருடமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த ஆர்.சோனியா வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணியமர்த்தப்பட்டார். 3 மாத பயிற்சிக்கு பிறகு நேற்று வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு செய்யாறு நகராட்சி ஆணையாளர் கீதா பொறுப்புகளை ஒப்டைத்தார்.
புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.சோனியா ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், நகராட்சி தலைவர் எச்.ஜலால், துணை தலைவர் க.சீனுவாசன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து நகராட்சி மேலாளர் ரவி தலைமையில் ஊழியர்கள் புதிய ஆணையாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஆணையாளர் நிருபர்களிடம் கூறுகையில், மார்ச் மாதம் நெருங்குவதால் வரி வசூல் துரிதப்படுத்தப்படும். வரிவசூலர்கள் தினசரி வரிவசூலுக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கப்பட்டு நிலுவையில்லாத நகராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் கடை வாடகை உள்ளிட்டவைகளை நகராட்சி அலுலகத்தில் உள்ள கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். நகரத்தை சுற்றிப் பார்த்து ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்பைடை வசதிகளும் மேற்கொள்ள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நாய்களை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கட்டுப்படுத்தாமல் உள்ளதால் சுற்றி திரியும் நாய்களுக்கு இனப்பெருக்க தடை ஊசி செலுத்த கால்நடை மருத்துவருடன் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
The post வந்தவாசியில் நாய்களை கட்டுப்படுத்த கால்நடை மருத்துவருடன் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை appeared first on Dinakaran.