- சந்தித்தல்
- திருவாரூர்
- கலெக்டர்
- சாரு
- திருவாரூர்
- திருவாரூர் கலெக்டர்
- அலுவலகம்
- மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், நவ.12: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார்.
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகள பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சாரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, கல்விக்கடன், வங்கிக்கடன், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 273 மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகையாக ரூ. 3 லட்சத்து 46 ஆயிரத்து 721 மதிப்பிலான வங்கி வரைவோலையினை பயனாளிகளிடம் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ சண்முகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம் ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சாரு வழங்கினார் appeared first on Dinakaran.