நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.108 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கி உள்ளார். தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் விடுதிகளில் 2,300 இருந்த வீரர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு, கிட்டத்தட்ட 2,800 ஆக உயர்ந்து உள்ளது, அதேபோல், மாணவர்களின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட தொகை நாளொன்றுக்கு 250 ரூபாயிலிருந்து இன்றைக்கு 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சீருடைக்கான தொகை ரூபாய் 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாகவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து, 2 ஆயிரம் ரூபாயாகவும் முதல்வர் உயர்த்தி வழங்கியுள்ளார்.
எஸ்டிஏடி விளையாட்டு விடுதிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்குவதற்காக இந்த ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகளில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ்நாட்டை விளையாட்டுத்துறை தலைநகராக்க வேண்டும் என்ற லட்சியத்தை, உங்களுடைய துணை இல்லாமல் எட்ட முடியாது. அதை உணர்ந்து, அரசு எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்ற உங்களுக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post கடந்த 3 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.108 கோடி வரை ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.