தனியார் மின்உற்பத்தி தொழிற்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணம் சிக்கியதாக தகவல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் மின் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் மின் உற்பத்தி, இரும்பு உருக்காலை செய்யும் தொழிற்சாலை, மரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏற்கனவே இரும்பு உருக்காலையில் நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து நேற்று காலை 10 மணியளவில் 8 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு தனியார் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தனியார் மின்உற்பத்தி தொழிற்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணம் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: