×

வரதட்சணை வழக்கில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவு

கோவை: வரதட்சணை வழக்கில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு, கைது வாரண்ட் பிறப்பித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 27ம் தேதி முருகானந்தத்தை ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2016ம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட வரதட்சணை மோசடி வழக்கில், பல முறை விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post வரதட்சணை வழக்கில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,state general secretary ,A. B. Murukananda ,Govai ,Secretary General ,A. B. ,Murukananda ,Goa ,General ,
× RELATED கடலூர், விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாத் நிவாரண பணி