×

கோயம்பேடு மார்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் நடந்துச்செல்லும் வழியை ஆக்கிரமித்து வியாபாரம் செய்துவருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அத்துடன் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்த கடைகளுக்கு 84,700 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ‘’அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி மீண்டும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தெரியவந்ததால் கடும் நடவடிக்கை எடுப்படும்’’ என்று அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், ‘’அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அபராதம் விதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் சாலையோர கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் வியாபாரம் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்பு கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அடையாள அட்டை வழங்கியது எப்படி, இந்த விஷயத்தில் அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

The post கோயம்பேடு மார்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Indumati ,
× RELATED போக்குவரத்து சீரமைப்பு பணியில்...