×

பீகார் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி: பீகார் மாநிலத்தில் நடக்க உள்ள இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய பிரசாந்த் கிஷோரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சத் பூஜை விழா காரணமாக பீகார் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஜன் சுராஜ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், சத் பூஜை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், சட்டமன்ற இடைத் தேர்தல் 13ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post பீகார் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Bihar midterm elections ,Delhi ,Prashant Kishore ,Bihar ,Jan Suraj ,Sad Pooja festival ,
× RELATED சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!!