×

தெலுங்கானாவில் அரசு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சரமாரியாக அடி உதை!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் உள்ள விகாராபாத்தில் அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மருந்து நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய அதிகாரிகள் சென்றுள்ளனர். மருந்து நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மீது கற்களை வீசி கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை சுற்றிவளைத்து கிராம மக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post தெலுங்கானாவில் அரசு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சரமாரியாக அடி உதை!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Vikarabad, Telangana ,
× RELATED தெலங்கானாவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்ட்கள் பலி