×

தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் லக்செர்லா என்ற கிராமத்தில் மருந்து கம்பெனி அப்பகுதியில் நிறுவப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தும் சூழல் உள்ளது.

இதனால் மக்களின் கருத்துக்களை கேட்டு ஆலோசனை கூட்டத்தை நடத்த அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அக்கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஆக்ரோஷமடைந்து அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளுடன் மாவட்ட மாவட்ட ஆட்சியரும் இருந்துள்ளார். அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அதிகாரிகளுக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. கிராம மக்கள் தாக்குதலை தொடங்கியவுடன் அதிகாரிகள் அப்பகுதியிலிருந்து உடனடியாக கிளம்பிவிட்டனர்.

அதிகாரிகள் வந்த வாகனங்கள் அக்கிராம மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக காட்சிகள் சமூங்க வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Luxerla ,Vikarabad, Telangana ,Saramari ,
× RELATED தெலங்கானாவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்ட்கள் பலி