×

திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம் – டெண்டர் வெளியீடு


திருச்சி: திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. கட்டிட வடிவமைப்பை தயார் செய்ய, ஆலோசகர்களை தேர்வு செய்ய பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. நூலகம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 தளங்கள் கொண்டதாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்

The post திருச்சியில் உலகத் தரத்தில் நூலகம் – டெண்டர் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Public Works Department ,Dinakaran ,
× RELATED தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம்,...