திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் நாளை வெள்ளோட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் ரூ70 லட்சம் மதிப்பில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தீபத்திருவிழாவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி வலம் வரும் மகா ரதத்தின் உயரம் 59 அடி. 200 டன் எடை கொண்டது. தேர் சக்கரத்தின் விட்டம் 9 அடி. மகா ரதத்தில் பழுதடைந்திருந்த தேவாசனம், நராசனம், சிம்மாசனம், அலங்கார தூண்கள் முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளன. 4 கொடுங்கை நிலைகளும், பிரம்மா மற்றும் துவாரகபாலகர்கள் சிலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அதோடு, சம்மயாழி 37, கொடியாழி 13, தேர் சிற்பங்கள் 153 உள்பட மொத்தம் 203 சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வண்ணம் பூசப்பட்டு தேர் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதன் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது.

The post திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் நாளை வெள்ளோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: