சென்னை : அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புதிய ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. விளையாட்டில் சிறப்பாக செயல்படும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க விதிகளை திருத்தி அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கு ரூ. 30,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
The post அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புதிய ஊக்கத்தொகை!! appeared first on Dinakaran.