வேதாரண்யம், நவ.6: தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் மாநில அளவில் நடந்த பேச்சு போட்டியில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் நடுசேத்தியை சேர்ந்த மதியழகன் மகள் சிவரஞ்சனி இரண்டாமிடம் பிடித்தார். இதைதொடர்ந்து மாணவி சிவரஞ்சனிக்கு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பரிசு வழங்கினர்.
இந்நிலையில் பஞ்சநதிக்குளம் நடுசேத்திக்கு சென்று மாணவி சிவரஞ்சனிக்கு திமுக தலைமை கழக வழக்கறிஞர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் மறைமலை வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னகுமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், பன்னாள் கிளை செயலாளர் குமணன் கார்த்தி, குரவபுலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமசுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வைரவநாதன், ஊராட்சி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரவி உடனிருந்தனர்
The post கலைஞர் நூற்றாண்டு விழா மாநில பேச்சு போட்டி வேதை மாணவி 2ம் இடம் appeared first on Dinakaran.