×

இண்டர்போலின் அடுத்த தலைவராக பிரேசில் போலீஸ் அதிகாரி தேர்வு

லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடந்த இன்டர்போல் பொதுச் சபையின் கூட்டத்தில் அடுத்த தலைவர் குறித்து விவாதிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருக்கும் ஜெர்மனியின் ஜூர்கன் ஸ்டாக், மூன்றாவது முறையாக பதவியேற்க அதன் விதிகளின்படி அனுமதிக்கப்படவில்லை என்பதால் புதிய தலைவர் தேர்வு நடந்தது.

இதில் பிரேசில் காவல்துறை அதிகாரி வால்டெசி உர்கிசா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இன்டர்போலின் அமெரிக்காவுக்கான துணைத் தலைவராக உர்கிசா உள்ளார். அவர் இன்டர்போல் புதிய தலைவராக நாளை பதவி ஏற்பார்.

 

The post இண்டர்போலின் அடுத்த தலைவராக பிரேசில் போலீஸ் அதிகாரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Brazil ,Interpol ,London ,Interpol General Assembly ,Glasgow, Scotland ,Germany ,Jurgen Stack ,Dinakaran ,
× RELATED பிரேசிலில் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 38 பயணிகள் பலி