×

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு


சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி சென்னையில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அகில இந்திய தெலுகு சம்மேளன தலைவர் சிஎம்கே.ரெட்டி, பொதுச்செயலாளர் நந்தகோபால் ஆகியோர், நடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். அப் புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

அதன்படி எழும்பூர் போலீசார், நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து கஸ்தூரி மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ேநற்று வழக்கு பதிவு செய்தனர். நடிகை கஸ்தூரியின் அவதூறு பேச்சு இரு சமுதாயங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதால் அவரை கைது செய்து விசாரிக்க ேவண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

The post தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு: நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : MUSK ,Chennai ,Kasturi ,Brahmins ,
× RELATED நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க...