- இஸ்ரேலிய குண்டுவீச்சு
- காசா ஜெருசலேம்
- இஸ்ரேலிய படை
- பாலஸ்தீனத்தின் காசா நகரம்
- இஸ்ரேல்
- ஹமாஸ்
- பாலஸ்தீனம்
- காசா
- தின மலர்
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது, கடந்த 2023 அக்.7ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், ட்ரோன்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதல்களில் 1100 பேர் பலியாகினர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் கடந்த ஓராண்டாக நடத்திய தாக்குதல்களில் இதுவரை 43,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காஸா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவும், தொடர்ச்சியாக நேற்று அதிகாலையும் இஸ்ரேல் ராணுவம், விமானம் மூலம் குண்டுமழை பொழிந்து நடத்திய அதிரடித் தாக்குதல்களில் 30 பேர் பலியாகினர். இவர்களில், 8 பெண்கள், 6 குழந்தைகள் அடங்குவர்.
The post இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி appeared first on Dinakaran.