×

புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதற்கு எதிராக ஜெயவர்தன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.புதிய தலைமைச் செயலக கட்டட வழக்கு தொடர்பாக அதிமுக ஆட்சியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் விசாரணை ஆணையம் அமைத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் விசாரணை ஆணையத்தை கலைத்து கடந்த 2018-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்கில் தன்னையும் இணைக்கக் கோரி ஜெயவர்தன் மனு தாக்கல் செய்தார். ஜெயவர்தன் தாக்கல் செய்த மனுவை கடந்தாண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜெயவர்தன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

The post புதிய தலைமைச் செயலக கட்டடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற்றதற்கு எதிராக ஜெயவர்தன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Jayawardhan ,Chennai ,Supreme Court ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...