×

டிரம்ப் அமெரிக்க அதிபராவார்!: தாய்லாந்து நீர்யானை கணிப்பு

பாங்காக்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், டிரம்ப் வெல்வாரா? கமலா ஹாரிஸ் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஒன்று, அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என கணித்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெறுவார் எனக் கணித்துள்ளது.

இதுகுறித்து உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஹிப்போ’ – மூ டெங் என்ற பெயரிடப்பட்ட அந்த நீர்யானையின் முன் இரண்டு தர்பூசணிப் பழங்கள் வைக்கப்பட்டது. அதில் ஒன்றில் டிரம்ப் பெயரும், மற்றொன்றில் கமலா ஹாரிஸ் பெயரும் எழுதப்பட்டது. அந்த குட்டி நீர்யானை நேராக டிரம்ப் பெயர் எழுதப்பட்ட தர்பூசணியை நோக்கிச் சென்று அதை புசித்தது. அருகிலிருந்த மற்றொரு பெரிய நீர் யானை கமலா ஹாரிஸ் பெயர் இருந்த தர்பூசணிப் பழத்தை உண்டது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று நம்பலாம்’ என்று கூறினர்.

The post டிரம்ப் அமெரிக்க அதிபராவார்!: தாய்லாந்து நீர்யானை கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Trump ,US ,Bangkok ,US presidential election ,Kamala Harris ,Kha Kiow ,Thailand ,
× RELATED தொழிலதிபர் எலான் மஸ்க் அமெரிக்க...