×
Saravana Stores

இரும்பு தூண்கள் அகற்றப்பட்டதால் நான்கு மாதத்துக்குப் பின் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற படகுகள்

Pamban Bridge, railway Bridgeராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தின் கப்பல் கால்வாய் பகுதியில், தூக்குப்பாலத்தை பொருத்தும் பணி கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. 700 டன் தூக்குப்பாலத்தை கால்வாய் பகுதியில் நகர்த்தி செல்ல தற்காலிக இரும்பு தூண்கள் கடலுக்குள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பணிகள் நிறைவடையும் வரை விசைப்படகுகள், கப்பல்கள் கால்வாய் கடல் வழியாக செல்ல தடை விதித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதனால் பழைய தூக்குப்பாலமும் மூடப்பட்டது. தொடர்ந்து புதிய செங்குத்து தூக்குப்பாலம் கடலுக்குள் நிறுத்தப்பட்ட இரும்பு தூண்கள் வழியே நகர்த்தி செல்லப்பட்டு வெற்றிகரமாக பாலத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது புதிய ரயில் பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், நான்கு மாதங்களாக கால்வாய் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தூண்கள் முழுமையாக அகற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று மண்டபம் வடக்கு ஜெட்டி பாலத்தில் இருந்து வந்த ஐந்து சிறிய விசைப்படகுகள் தூக்குப் பாலத்தின் அடியில் கடந்து தென்கடலுக்கு சென்றன. புதிய ரயில் பாலம் திறப்புக்கு பின் தடை நீக்கப்பட்டு கால்வாய் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

The post இரும்பு தூண்கள் அகற்றப்பட்டதால் நான்கு மாதத்துக்குப் பின் பாம்பன் பாலத்தை கடந்து சென்ற படகுகள் appeared first on Dinakaran.

Tags : Bombon Bridge ,Rameshwaram ,Pamban Sea ,Dinakaran ,
× RELATED பாம்பன் புதிய ரயில் பாலத்தில்...