இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த நபர்கள் சிறுவன் வீட்டிற்கே சென்று கொடூரமாக தாக்கி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுவனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையம் கோட்டை தாலுகா காவல்துறையினர் சுமார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கொலை முயற்சி, அவதூறாக பேசுதல், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை முதற்கட்டமாக பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் இவர்களுடன் யார் உடந்தையாக இருந்தார்களா அல்லது வேறேதேனும் காரணம் இருக்கிறதா. இவர்களுக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் ஏதேனும் முன்பகை இருக்கிறதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தவிர திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், படுகாயமடைந்த சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 17 வயது சிறுவன் சரமாரியாக வெட்டப்பட்ட கொலை முயற்சி சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post நெல்லையில் பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: 4 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.