- மக்கள் குறைதீர் கூட்டம்
- திருச்சி
- மக்கள் குறை நாள்
- மாவட்ட கலெக்டர்
- கலெக்டர்
- பிரதீப் குமார்
- தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்
- தின மலர்
திருச்சி, நவ.5: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள், தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள், கல்வி உதவித்தொகை, வங்கி கடன், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 384 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அறக்கட்டளையின் உள்ளுர் குழுவின் மூலமாக பாதுகாவலா் நியமனச் சான்று 10 மாற்றுத்திறனாளி நபா்களுக்கும் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளையும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் அறிவுசார் குறைபாடுடைய மூன்று குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலியையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குப்தா, டிஆர்ஓ ராஜலட்சுமி, டிஎஸ்பி (பயிற்சி) விவேக் கண்ணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தவசெல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் மீனாட்சி, துணை கலெக்டர் (அகதிகள் முகாம்) பாத்திமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
The post மக்கள் குறைதீர் கூட்டம்: 384 மனுக்கள் மீது விசாரணை appeared first on Dinakaran.