×

அன்னியனாக, அம்பியாக திடீரென மாறுவார் சீமான்: பிரேமலதா கிண்டல்


திருப்பரங்குன்றம்: சீமான் திடீரென அன்னியனாகவும், அம்பியாகவும் மாறுவார் என பிரேமலதா கூறியுள்ளார். மதுரை அருகே பசுமலையில் நேற்று நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல திருமணத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, சுதீஷ், விஜயபிரபாகரன், மாஜி அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் குறித்து சீமான் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, சீமான் திடீரென அன்னியனாக மாறுவார். திடீரென அம்பியாக மாறுவார். இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை. என் தம்பி என சொன்னார்.

இப்ப ஏன் லாரியில் அடிபட்டு சாவாய்னு சொல்றாரு என சீமான் தான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும். எல்லாருக்கும் பேசும் சக்தியை கடவுள் கொடுத்துள்ளார். அதற்காக நாம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது என்றார். விஜயகாந்த் மாநாட்டின் சாதனையை நடிகர் விஜய் முறியடித்தார் என்கின்றனரே? என கேட்டதற்கு, 2005ல் திருப்பரங்குன்றத்தில் மக்கள் ஆதரவுடன் 25 லட்சம் தொண்டர்கள் மத்தியில் தேமுதிக பெயரை அறிவித்து, சரித்திரம் படைத்தார் விஜயகாந்த். இதுதான் உண்மை என்றார்.

The post அன்னியனாக, அம்பியாக திடீரென மாறுவார் சீமான்: பிரேமலதா கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Ambi ,Seaman ,Premalatha ,Akkatsi ,Secretary General ,Sudish ,Vijayaprabharan ,Majhi ,Ministers ,Udayakumar ,Rajendrabalaji ,Demutika Executive House ,Pasumala ,Madurai ,
× RELATED சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்