×

விளையாட்டு போட்டியின்போது மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

சென்னை: விளையாட்டுப் போட்டிகளின்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. திருவள்ளூர் ஒத்திக்காடு ஏரியில் 2020-ல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது பந்து தாக்கி லோகநாதன் என்பவர் உயிரிழந்தார். இளைஞர் லோகநாதனின் தந்தை தாமோதரன் அளித்த புகாரில் ராசு, ஐயப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராசு, ஐயப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையில்; போட்டியை ஏற்பாடு செய்தவர்களுக்கு மரணம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை என கூறிய நீதிபதி, ராசு, ஐயப்பன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

The post விளையாட்டு போட்டியின்போது மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,High Court of Chennai ,Tamil Nadu Youth Welfare and Sport Development Department ,Lokanathan ,Thiruvallur Otikadu Lake ,Dinakaran ,
× RELATED நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு...