×

ஒகேனக்கல்லுக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 6,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மெயினருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,712 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 9,917 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 107.50 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 107.32 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 74.65 டிஎம்சியாக உள்ளது.

The post ஒகேனக்கல்லுக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Cauvery ,Okanagan Cauvery ,Mainaruvi ,Sini ,Dinakaran ,
× RELATED மேட்டூர் நீர்மட்டம் 108.68 அடி