×

பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.12.50 கோடி நிதி

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.12 கோடியே 50 லட்சம் நிதியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுமார் 37 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் இடையே விளையாட்டு தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மண்டல மற்றும் மாநில அளவிலான பயிற்சிகள், தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க வைத்தல் மற்றும் ஸ்கூல் பெடரேஷன்ஆப் இந்தியா அமைப்பின் நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்றவற்றை நடத்துவதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ரூ. 12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் மூலம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், மாணவ மாணவியரை விளையாட்டிலும் ஈடுபட வைத்து அவர்களை அதில் மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களின் திறன்களை திறம்பட வளர்த்து மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்கத் ேதவையான வளங்களை பயிற்சியாளர்கள் அளிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ெதரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளுக்கு அரசே நிதி கொடுப்பதோடு அல்லாமல், அதை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், விளையாட்டுக் கல்விக்கான நேரத்தை விட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கான வழிகளையும் ஆய்வு செய்வதாக அந்த குழுக்கள் தெரிவிக்கின்றன. அதற்காக வாரந்தோறும் ஆய்வுகள், உடற்கல்வி நேரத்தை பராமரித்தல், நேரத்தை அதிகரித்தல், விளையாட்டு உபகரணங்களை நன்கு பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஆலோசித்து வருகின்றன.

மேலும் தற்போதைய நிலையில் பள்ளி மாணவர்கள் புதிய வாய்ப்புகளுக்காக உற்சாகமாக காத்திருக்கின்றனர். உடற்கல்விக்கான நேரம் மற்றும் உபகரணங்கள் இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் விளையாட்டுகளில் அதிக திறன் மிக்கவர்களாக மாறமுடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் இந்த ஆர்வத்தை அறிந்த பள்ளிக் கல்வித்துறை தற்போது ரூ.12 கோடியே 50 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பள்ளிகளில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.12.50 கோடி நிதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,Department of School Education ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி...