×

4 கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் வாரியம் தகவல்

சென்னை: 4 மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: கே.கே நகர், அம்பத்தூர் மற்றும் மயிலாப்பூர், தண்டையார் பேட்டை கோட்டங்களில் நவ.5ம் தேதி காலை 11.00 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். கே.கே.நகர் கோட்டத்திற்கு 110 கி.வோ, கே.கே. நகர் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்திலும், அம்பத்தூர் கோட்டத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது மெயின் ரோட்டில் உள்ள அம்பத்தூர் கோட்ட துணை மின் நிலைய வளாக செயற் பொறியாளர் அலுவலகத்திலும், மயிலாப்பூர் கோட்டத்திற்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் 110 கி.வோ.

வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலையத்தில் மயிலாப்பூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு எண். 805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில் தண்டையார்பேட்டை கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்திலும் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கே.கே. நகர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post 4 கோட்டங்களில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electricity ,CHENNAI ,4 ,Electricity Board ,KK Nagar ,Ambattur ,Mylapore ,Thandaiyarpet ,KW ,Division ,KK. Nagar ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!