×

தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 31ம் தேதி சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ஒரு பயணிக்கு குரங்கம்மை தொற்று சந்தேகிக்கப்பட்டது. அந்த நபர் குரங்கமை பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து குரங்கம்மை பரிசோதனைக்காக உரிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிங் இன்ஸ்டியூட் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இம்மாதிரியின் ஒரு பகுதி,புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வக நிறுவனத்திற்கு குரங்கம்மை உறுதிப்படுத்தும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தின் ஆரம்பகட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு குரங்கம்மை தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. தேசிய வைரஸ் ஆய்வக நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட இறுதி ஆய்வறிக்கையும் குரங்கம்மைத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளது.

The post தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Subramanian ,Chennai ,Minister of Medicine ,Subramanian ,Trichy Airport ,Charjah ,Sri Mahatma Gandhi Government Medical College Hospital ,Minister ,
× RELATED ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!