×

காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றார். முன்னதாக, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னியில் வருகிற 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார்.

சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளர் பா.சுப்பிரமணியம் மாநாட்டின்போது நடைபெறும் SOCATT கூட்டங்களில் கலந்து கொள்கிறார். தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மற்றும் கூடுதல் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று (2ம் தேதி) இரவு 11.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து மலேசியா நாட்டிற்கு செல்கின்றனர். பின்பு சிட்னி நகருக்கு 5ம் தேதி சென்றடைவார்கள்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை தலைவர் அறையில் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவுவை சந்தித்து, ஆஸ்திரேலியா நாட்டின், சிட்னி நகரில் நடைபெற உள்ள 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள செல்வதையொட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பேரவை தலைவர் அப்பாவு மற்றும் கூடுதல் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு நியூசிலாந்து நாட்டிற்கு சென்று, பின்னர் 17ம் தேதி (ஞாயிறு) இரவு 10.10 மணியளவில் சிங்கப்பூர் விமானம் மூலம் சென்னை திரும்புகின்றனர்.

The post காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Dad ,Australia ,Commonwealth parliamentary conference ,Mu K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Legislative ,Assembly ,MLA ,K. Stalin ,Sydney ,
× RELATED சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற...