×

கொலையான கணவரின் ரத்தக்கறை படுக்கையை சுத்தம் செய்த கர்ப்பிணி: மத்திய பிரதேசத்தில் அவலம்


போபால்: மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கணவர் சிகிச்சை பெற்றபோது மருத்துவமனையின் படுக்கையில் இருந்த ரத்தத்தை கர்ப்பிணி பெண் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டம் லால்பூர் சானி கிராமத்தை சேர்ந்தவர் தரம் சிங் மராவி (65). இவரது மகன்கள் ரகுராஜ் மராவி (40), சிவராஜ் மராவி ( 40). இவர்கள் கடந்த 31ம் தேதி அங்குள்ள நிலத்தில் நெல் அறுவடைக்காக சென்றனர். அப்போது, அங்கு வந்த 25 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது சரமாரியாக தாக்கியது. மேலும், அரிவாளால் வெட்டினர்.

இதில், பலத்த காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிவராஜ் மராவி உரியிழந்தார்.  அப்போது அவர் படுத்திருந்த படுக்கையில் அதிகளவு ரத்தம் இருந்துள்ளது. இதனை அவரது 5 மாத கர்ப்பிணி மனைவி சுத்தம் செய்யுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இதையடுத்து அவர் கண்ணீர் மல்க அதனை சுத்தம் செய்கிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. கர்ப்பிணி பெண்ணை கணவரின் ரத்தத்தை சுத்தம் செய்ய வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்திய அம்மாநில சுகாதாரத்துறை, அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கொலையான கணவரின் ரத்தக்கறை படுக்கையை சுத்தம் செய்த கர்ப்பிணி: மத்திய பிரதேசத்தில் அவலம் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Bhopal ,Dindori district ,Lalpur Sani ,
× RELATED 40 ஆண்டுகளுக்கு பிறகு போபால் தொழிற்சாலையில் இருந்து நச்சு கழிவு அகற்றம்