×

பஸ்கள் மோதல் : 30 பயணிகள் படுகாயம்


திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அடுத்த கோகவரம் நோக்கி தனியார் சுற்றுலா சொகுசு பஸ் பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. அந்த பஸ் இன்று அதிகாலை தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா பைபாஸ் கடகம்மா குடம் அருகே பயணிகளை இறக்கிவிடுவதற்காக சாலையோரம் நின்றது. பயணிகள் இறங்கியவுடன் சொகுசு பஸ்சை அதன் டிரைவர் மீண்டும் இயக்கியபோது பின்னால் வந்த தெலங்கானா மாநில அரசு அதிவிரைவு சொகுசு பஸ் தனியார் சொகுசு பஸ் மீது மோதியது.

இதில் தனியார் சொகுசு பஸ்சின் பின்புறம், அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பஸ்களில் இருந்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் கோதாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பஸ்கள் மோதல் : 30 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : THIRUMALI ,TELANGANA STATE ,HYDERABAD ,GOKAVARAM ,AP STATE RAJAMUNDRI ,Telangana State Suryapet District Godada Bypass Katagamma ,Dinakaran ,
× RELATED பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் டோலிவுட் நடிகர்கள்