×

பட்டாசு வெடித்து இருவர் உயிரிழப்பு

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் சேதுநகர், மைகுண்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் கரண்ராஜ் (12). இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாட ராமேஸ்வரம் புதுரோட்டில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார். அங்கு நேற்று முன்தினம் இரவு, சிறுவன் கரண்ராஜ் வாணவெடியை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக வாணவெடி சிறுவனின் முகம் மற்றும் மார்பு பகுதிகளில் பட்டு வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் இருதயராஜ் மகன் ஆண்டனி பிரேம்குமார்(24), வின்சென்ட் மகன் பவுல்ராஜ் (22), யூநேக் மகன் டேவிட் வின்சென்ட் (22). இவர்கள் 3 பேரும் நேற்றுமுன்தினம் இரவு ஒரு பைக்கில் எறையூர் பாளையம் கிராமத்திற்கு சென்று அங்கு நாட்டு பட்டாசுகளை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மீண்டும் எறையூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அதில் இருந்து வந்த தீப்பொறி டேவிட் வின்சென்ட் வைத்திருந்த நாட்டு பட்டாசு மீது விழுந்ததில், நாட்டு பட்டாசுகள் பயங்கரமாக வெடித்தது. இதில் டேவிட் வின்சென்ட் உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயமடைந்தனர்.

The post பட்டாசு வெடித்து இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Firecracker ,Rameswaram ,Maikundu, Mandapam Sethunagar, Ramanathapuram district ,Karanraj ,Pudurod, Rameswaram ,Diwali ,
× RELATED ஆழிப்பேரலை உருக்குலைத்து 60 ஆண்டுகள்...