×

காவிரியில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்

திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறை அருகே காவிரி ஆற்றில் கடந்த 30ம்தேதி மர்ம பொருள் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர்.

சுமார் 2 அடி உயரமுள்ள பிளாஸ்டிக் பைப்பினால் ஆன ராக்கெட் லாஞ்சர் வடிவில் இருந்த அந்த பொருளை கைப்பற்றி திருச்சி வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை திருச்சியில் இருந்து முக்கொம்பு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், முக்கொம்பு நடுக்கரையில் ராக்கெட் லாஞ்சரை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

The post காவிரியில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Tiruchi ,Anthanallur Shiva temple ,Jiyapuram ,Tiruchi district ,DSP ,Balachander ,Inspector ,Senthilkumar ,Dinakaran ,
× RELATED மேட்டூர் காவிரியில் மிதந்து சென்ற சடலம்