×

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி

புதுடெல்லி: உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் வாயிலாக அதிக வருவாய் ஈட்டியதன் மூலம், அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் மாதம் உள்நாட்டு விற்பனை அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளது. இதனால் அக்டோபர் மாதம் 9 சதவீதம் அதிகரித்து ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் ஒன்றிய ஜிஎஸ்டி வசூல் ரூ.33,821 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ.41,864 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.99,111 கோடியாகவும், செஸ் ரூ.12,550 கோடியாகவும் உள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1.72 லட்சம் கோடி வசூலானது. அதைவிட 0.15லட்சம் கோடி அதிக வசூலாகி உள்ளது.

மேலும் இந்த அக்டோபர் மாதம் மட்டும் ரூ.19,306 கோடி மதிப்பிலான ரீ பண்ட்கள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 18.2 சதவீத வளர்ச்சியாகும். ரீ பண்ட் வழங்கப்பட்டதை கழித்துப்பார்த்தால் நிகர ஜிஎஸ்டி வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது.

The post அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.87 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Dinakaran ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை