×
Saravana Stores

தொடக்கத்திலேயே விஜய்க்கு சறுக்கல் தமிமுன் அன்சாரி கருத்து

வேதாரண்யம்: மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கை: விஜய் தனது மேடையை அரசியல் விழிப்புணர்ச்சிக்கு பயன்படுத்தினாரா அல்லது திறந்தவெளி திரையரங்கமாக மாற்றினாரா என்ற விமர்சனத்துக்குள் நாங்கள் நுழையவில்லை. பாசிசம் குறித்து விஜய் வெளிப்படுத்திய கருத்தும், பேசிய தொணியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் மேடையில் நக்கலும், நையாண்டியுமாக பாசிசமா? பாயாசமா? என கேலியாக பேசியிருக்கிறார். தனது துவக்க உரையில் அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் விஜய் முதல் தோல்வியை சந்தித்திருக்கிறார். நாட்டு மக்கள் பாசிசத்துக்கு எதிராக அணி திரண்டு வரும் நிலையில் விஜய் கருத்து தொடக்கத்திலேயே அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தொடக்கத்திலேயே விஜய்க்கு சறுக்கல் தமிமுன் அன்சாரி கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamimun Ansari ,Vijay ,Vedaranyam ,Human Democratic Party ,President ,
× RELATED அரசியலை கண்டு எனக்கு பயமில்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரை