பசுமை தீபாவளி கொண்டாட வலியுறுத்தி போஸ்டர் வெளியிட்டார் செங்கல்பட்டு சார் ஆட்சியர்

செங்கல்பட்டு: பசுமை தீபாவளியாக இந்த 2024ம் ஆண்டு கொண்டாட வலியுறுத்தி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் வெளியிட்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைப்பு கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் தலைவர் சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா பங்கேற்று இந்த போஸ்டரை வெளியிட்டார். அனைவரும் மாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாட வேண்டும் என சார் ஆட்சியர் நாராயண சர்மா தெரிவித்தார். காற்று மாசு, 125 டெசிமலுக்கு மேல் ஒளி மாசு உண்டாக்கும் பட்டாசுகளை புறகணிப்போம்.

போரிய தாது படிந்த பச்சை நிறத்தில் ஒளிரும் பட்டாசுகளை தவிர்ப்போம், பட்டாசு கழிவுகளை தரம்பிரித்து வீடு தேடி வரும் நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திடுவோம், சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்ப்போம், பசுமை பட்டாசுகளை உபயோகித்து தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாடுவோம், நாளைய சமூதாயத்திற்க்கு மாசில்லா உலகை அமைப்போம், பசுமை மரகன்றுகளை நடுவோம், பட்டாசுகளை தமிழக அரசு நிர்ணயித்த கால அளவான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என இந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

The post பசுமை தீபாவளி கொண்டாட வலியுறுத்தி போஸ்டர் வெளியிட்டார் செங்கல்பட்டு சார் ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: