×
Saravana Stores

முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

சென்னை: முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையையொட்டி ராமநாதபுரம் செல்ல முதல்வர் மதுரை வருகிறார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் நாளை இரவு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 13 கிலோ தங்கக் கவசம், மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ளது.

முதல்வர் வருகைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நான்கு துணை ஆணையர்களின் மேற்பார்வையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாநகர் விமான நிலையம் பாதுகாப்பு மண்டலமாக உள்ளதால் ட்ரோன் கேமிராக்கள் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் முழுசோதனைக்குப்பின்பே அனுமதிக்கப்படும். எனவே, பயணிகள் காலதாமதமின்றி சற்று முன்பே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மதுரை விமான நிலையத்தைச் சுற்றி உள்ள கிராமங்களில் தேவையற்ற நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் தெரிவிக்குமாறு மதுரை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

The post முதலமைச்சரின் வருகையையொட்டி மதுரையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,Madurai ,Madurai district administration ,Ramanathapuram ,Muthuramalingath ,Gurupuja ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை