×

மத்திய பிரதேசத்தில் ரயில் இன்ஜினில் தீ

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் ரயில் நிலையத்தில்(மவ்) இருந்து ரட்லத்துக்கு நேற்று மாலை பயணிகள் ரயில் சென்றது. ருனிஜா மற்றும் நவ்கான் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது ரயில் இன்ஜினில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இன்ஜினில் பற்றிய தீ உடனே அணைக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் இல்லை. விபத்து குறித்து அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினர் என்று மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கேம்ராஜ் மீனா தெரிவித்தார்.

The post மத்திய பிரதேசத்தில் ரயில் இன்ஜினில் தீ appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Indore ,Ambedkar Nagar Railway Station ,Mau ,Ratlat ,Runija ,Navgaon ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் கேட்பாரற்று நின்ற காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்!!