- பாபனாசம் பட்டப்பானி
- கலெக்டர் பங்களா
- கான்பூர்
- பாபனாசம் படப்பானி
- விமல் சோனி
- சிவில் லைன்ஸ்
- கான்பூர், உத்தரப் பிரதேசம்
- தின மலர்
கான்பூர்: பாபநாசம் படபாணியில் பெண்ணை கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் 4 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்த விமல் சோனி ஜிம் நடத்தி வருகிறார். இவரது ஜிம்மில் அதே சிவில் லைன்ஸ் குடியிருப்பாளர் ஏக்தா குப்தா(32) என்ற பெண் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா மாயமானார். இது குறித்து கணவரான பங்கு சந்தை தரகர் குப்தா போலீசில் புகார் செய்தார். ஆனால், ஏக்தா குப்தா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், 4 மாதத்துக்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஏக்தாவை கொலை செய்ததாக ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி கைது செய்யப்பட்டுள்ளதார். இது குறித்து போலீசார் கூறுகையில், பங்கு சந்தை தரகரின் மனைவியான ஏக்தா குப்தாவுடன் விமல் சோனிக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது. இதற்கு, ஏக்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசுவதற்காக கடந்த ஜூன் 24ம் தேதி ஏக்தா குப்தாவை தனி இடத்துக்கு விமல் சோனி அழைத்து சென்றுள்ளார். அங்கு விமல் சோனிக்கும், ஏக்தா குப்தாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விமல் சோனி ஏக்தா குப்தாவின் கழுத்தில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். உடனே அவரது உடலை கான்பூர் மாவட்ட ஆட்சியர் பங்களா வளாகத்துக்கு கொண்டு சென்று விமல் சோனி புதைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் வீட்டருகே புதைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்வதால் விமல் சோனி இவ்வாறு செய்துள்ளார். மேலும் அவ்வாறு உடலை புதைக்கும்போது விமல் சோனி தன் செல்போனை பயன்படுத்தாமல் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். பாபநாசம் படத்தில் வருவது போல், மாவட்ட ஆட்சியர் பங்களா வளாகத்தில் கொல்லப்பட்டவரின் உடலை புதைத்தால் காவல்துறையினர் தேட மாட்டார்கள் என யோசித்து அதன்படி விமல் சோனி செயல்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post பாபநாசம் படபாணியில் பெண்ணை கொன்று கலெக்டர் பங்களாவில் புதைத்த ஜிம் பயிற்சியாளர்: 4 மாதத்துக்கு பின் போலீசிடம் சிக்கினார் appeared first on Dinakaran.