×

ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் பாஜவுக்கு கஷ்டம்தான்: அசாம் முதல்வர் ஹிமந்தா கவலை

கவுகாத்தி: ஜார்க்கண்ட் மாநில சட்ட பேரவைக்கு அடுத்த மாதம் 13ம் தேதி மற்றும் 20ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் தேர்தலுக்கான பாஜ இணை பொறுப்பாளரும் அசாம் முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன்.

அதனால், அசாம் இடைதேர்தல் பிரசாரத்துக்கு செல்லவில்லை.இடைதேர்தல் பிரசாரத்துக்கு என்னால் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், ஒன்று அல்லது 2 இடங்களில் பிரசாரம் செய்வேன்’’ என்றார். ஜார்க்கண்டில் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது,ஜார்க்கண்ட் பாஜவை பொறுத்தவரை கஷ்டமான மாநிலம் ஆகும். ஆனால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

The post ஜார்க்கண்ட் பேரவை தேர்தல் பாஜவுக்கு கஷ்டம்தான்: அசாம் முதல்வர் ஹிமந்தா கவலை appeared first on Dinakaran.

Tags : Jharkhand assembly ,BJP ,Assam ,CM Himanta ,Guwahati ,Jharkhand Legislative Assembly ,Jharkhand ,Chief Minister ,Himanta Biswa Sharma ,
× RELATED அசாம் மாநிலம் போல ஒடிசா மாநிலத்திலும் மாட்டிறைச்சிக்கு தடை