×
Saravana Stores

பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் 60 டிரில்லியன் டாலர்

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பிரிக்ஸ் நாடுகளையே சார்ந்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரம் என்பது 60 டிரில்லியன் டாலர் என்று ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மொத்த பொருளாதாரம் 19.35 டிரில்லியன் டாலராக உள்ளது. உலகின் பணக்கார நாடுகளுக்கு, பிரிக்ஸ் நாடுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியா: இந்தியாவில் இருந்து ரத்தினங்கள், நகைகள், பார்மா, பெட்ரோலிய பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் மற்றும் இன்ஜினியரிங் தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு 78 பில்லியன் டாலர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 124 பில்லியன் டாலர்கள் கிடைக்கிறது.

சீனா: சீனாவில் இருந்து இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. சீனா ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிற்கு விற்பனை செய்கிறது.

ரஷ்யா: உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு, பிளாட்டினம், உரங்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வாங்கியது. ஆண்டுதோறும் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ரஷ்யா விற்பனை செய்தது. ஐரோப்பிய நாடுகள் கனிமங்கள், எரிபொருள்கள், எண்ணெய், எரிவாயு, எஃகு, ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், தானியங்களை வாங்குகின. மொத்தம் 195 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் நடந்தது.

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவில் இருந்து 24 சதவீத கனிம பொருட்களை அமெரிக்கா வாங்குகிறது. ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடைபெறுகிறது. ஐரோப்பிய நாடுகள் 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை தென்னாப்பிரிக்காவிடம் இருந்து வாங்குகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து எண்ணெய், ரசாயனங்கள், சொகுசு வாகனங்கள், கொதிகலன்கள் போன்றவற்றை அமெரிக்கா வாங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ஆண்டுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு விற்பனை செய்கிறது. எண்ணெய்கள், லூப்ரிகண்டுகள் மற்றும் பிற பெட்ரோ கெமிக்கல்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை ஐரோப்பிய நாடுகள் சார்ந்துள்ளன. மொத்தம் 15 பில்லியன் டாலர் வரை வர்த்தகம் நடக்கிறது.

The post பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் 60 டிரில்லியன் டாலர் appeared first on Dinakaran.

Tags : BRICS ,USA ,President ,Putin ,America ,Dinakaran ,
× RELATED டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு...