×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிய தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1%க்கு மேல் சரிந்து, சற்று மீண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் -சரிந்து 79,402 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இடைநேர வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 927 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து சற்று மீண்டு முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 219 புள்ளிகள் சரிந்து 24,181 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 663 புள்ளிகள் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Bombay ,Dinakaran ,
× RELATED பிரபல மாபியா கும்பல் தலைவரான சோட்ட...