கோவையில் 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் 100 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இன்று 24 பேருந்துகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.

கோவையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் நீண்ட நாள்களாக சாலைப் பாதுகாப்பு கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு கோவைக்கு 100 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து சோமனூா், காந்திபுரத்தில் இருந்து வாளையாறு, அன்னூா், காரமடை, வேலந்தாவளம், சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.

உக்கடம் – சோமனூர் (90A) வழித்தடத்திற்கு 5 பேருந்துகளும், உக்கடம் – தமிழ்நாடு பொறியியல் கல்லூரி (90/ 90A) வழித்தடத்திற்கு 1 பேருந்தும், காந்திபுரம் – சோமனூர் (20A) வழித்தடத்திற்கு 5 பேருந்துகளும், காந்திபுரம் – சோமனூர் (40A/20A)  வழித்தடத்திற்கு 1 பேருந்தும், காந்திபுரம் – துடியலூர் (111&111A) வழித்தடத்திற்கு 6 பேருந்துகளும், காந்திபுரம் – வாலையார் (96) வழித்தடத்திற்கு 4 பேருந்துகளும். காந்திபுரம் – வேலந்தாவளம் (48&48A) வழித்தடத்திற்கு 2 பேருந்தையும் தொடங்கி வைத்தார்.

The post கோவையில் 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Related Stories: