வடமதுரையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வடமதுரை, அக். 25: வடமதுரை ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மற்றும் 100 நாள் வேலையை ஊராட்சி பகுதிகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி கிராமப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

The post வடமதுரையில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: