உக்ரைனுக்கு வட கொரியா உதவி சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம்: தென் கொரியா எச்சரிக்கை

சியோல்: உக்ரைனுக்கு வட கொரியா துருப்புகள் அனுப்பியதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்றும் இதற்கு எதிராக பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வட கொரியா 3,000 வீரர்களை அனுப்பி உள்ளதாக அமெரிக்காவும், தென் கொரியாவும் தெரிவித்தன.

மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 10,000 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கு வட கொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இதை ரஷ்யாவும், வட கொரியாவும் மறுத்துள்ளன. இந்த நிலையில் போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துதா நேற்று தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோலை சந்தித்து பேசினார். அதன் பின் யூன் சுக் பேசுகையில்,

‘‘வட கொரியா படைகளை ரஷ்யாவுக்கு அனுப்புவது, ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறுவதாகும். இது, உலக பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். வட கொரியாவுக்கும், ரஷ்யாவுற்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பின் அளவைப் பொறுத்து கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து எதிர் நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்படும்’’ என்றார்.

The post உக்ரைனுக்கு வட கொரியா உதவி சும்மா வேடிக்கை பார்க்க மாட்டோம்: தென் கொரியா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: