×
Saravana Stores

கீழடியில் ரூ.15.69 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: டெண்டர் கோரியது தொல்லியல்துறை

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க, தமிழ்நாடு அரசு கடந்த பட்ஜெட்டில் ரூ.17 கோடி நிதி ஒதுக்கியது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கீழடி அகழாய்வு தளத்தில் ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி காட்சியகம் அமைக்க தொல்லியல் துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்த 4.5 ஏக்கர் நிலத்தில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமையும்போது, இந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழும் என தொல்லியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கீழடியில் ரூ.15.69 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம்: டெண்டர் கோரியது தொல்லியல்துறை appeared first on Dinakaran.

Tags : Geezadi ,Department of Archeology ,Tiruppuvanam ,Tamil Nadu government ,Tiruppuvanam, Sivagangai district ,Keezadi Excavation Site ,Air Museum ,Keezadi ,Dinakaran ,
× RELATED கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியக...