×
Saravana Stores

தீபாவளி பண்டிகை.. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

தீபாவளி பண்டிகை அன்று சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி திருநாளில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மைச் சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி, காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோா்கள், நோய்வாய்பட்டுள்ள வயோதிகா்கள் உடல் அளவிலும் மனதளவிலும்பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா்.

இதனால் தமிழ்நாடு அரசு கடந்த 4ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அதேபோல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீபாவளி அன்று பட்டசுகளை கையாளும் முறைபற்றி பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க வேண்டும். அருகில் தீப்பற்றும் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தனிநபர்கள், சொத்துகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

The post தீபாவளி பண்டிகை.. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Public Health Department ,Department of Public Health ,Dinakaran ,
× RELATED பட்டாசுகளை திறந்த இடத்தில் வெடிக்க...