×

தியேட்டரில் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படும்: சொல்கிறார் சம்யுக்தா

சென்னை: தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வெளியான ‘விரூபாக்‌ஷா’ என்ற படம், தமிழில் வரும் 5ம் தேதி வெளியாகிறது.கார்த்திக் வர்மா டண்டூ இயக்கியுள்ளார். சம்யுக்தா, சுனில், பிரம்மாஜி, அஜய், ரவி கிருஷ்ணா நடித்துள்ளனர். சம்ஹத் சாய்நூதீன் ஒளிப்பதிவு செய்ய, ‘காந்தாரா’ அஜனீஸ் லோக்நாத் இசை அமைத்துள்ளார். வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். தமிழ்ப் பதிப்பை ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாய் தரம் தேஜ், ‘நான் சாதாரணமான சென்னை தி.நகர் பையன். 1991ல் அடையாறில் ஒரு பள்ளியில் படித்தேன். தெலுங்கில் பல வெற்றிகள் பெற்றிருந்தாலும் கூட, தமிழில் வெற்றிபெற ஆசைப்படுகிறேன்.

அது ‘விரூபாக்‌ஷா’ மூலம் நிறைவேறுகிறது. இப்படத்தில் நடிக்க இன்ஸ்பிரேஷனாக இருந்தவர், ரஜினிகாந்த். அவர் நடித்த ‘சந்திரமுகி’ படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். அதுபோல் இப்படத்திலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது’ என்றார். சம்யுக்தா பேசும்போது, ‘எனக்கு தமிழ் பேசத் தெரியும். தமிழ்நாட்டை ரொம்ப பிடிக்கும். ‘வாத்தி’ படம் ரிலீசான பிறகு ‘விரூபாக்‌ஷா’ படத்தில் நடித்துள்ளேன். ஒரு திரைப்படத்தை ஓடிடியில் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ‘விரூபாக்‌ஷா’ படம், தியேட்டரில் பார்த்து மகிழ வேண்டிய படம். காரணம், இது தொழில்நுட்ப ரீதியாக புதுவித அனுபவங்களை ரசிகர்களுக்கு தரக்கூடியது என்பதுதான்’ என்றார்.

The post தியேட்டரில் பார்த்தால் மகிழ்ச்சி ஏற்படும்: சொல்கிறார் சம்யுக்தா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samyukta ,Karthik Verma ,Dandoo ,Sunil ,Brahmaji ,Ajay ,Ravi Krishna ,Samhad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பஞ்சாப், அரியானா உட்பட பல மாநிலங்களில்...